பிபின்ராவத் உருவப்படத்துக்கு அஞ்சலி
கயத்தாறில் பல்வேறு இடங்களில் பிபின்ராவத் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலையில், ெஹலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கயத்தாறு சுற்றுவட்டார முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் கயத்தாறு போலீசார் கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை மெயின் ரோடு வழியாக புதிய பேரூராட்சி அலுவலகம் வரை அமைதி பேரணியாக சென்று, அங்கு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டோனி திலீப், மாரியப்பன் மற்றும் கயத்தாறு சுற்றுவட்டார முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story