திருவள்ளூர் அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை


திருவள்ளூர் அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2021 9:01 PM IST (Updated: 9 Dec 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து நகை-பணம் திருட்டு போனது தெரியவந்தது.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயநகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 48). இவர் சென்னை மயிலாப்பூரில் லேப்டாப் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜெகதீஷ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர்.


Next Story