பனை மரம் விழுந்து சிறுவன் பலி
பனை மரம் விழுந்து சிறுவன் பலி
காவேரிப்பட்டணம், டிச.10-
பனை மரம் விழுந்து சிறவன் பலியானான். தாயின் கண்முன்னே இந்த பரிதாபம் நடந்துள்ளது.
நாகரசம்பட்டி அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பள்ளி சிறுவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே பாறையூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் மகன் சேது (வயது 6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் சேதுவுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பள்ளி செல்லவில்லை.
தனது தாயுடன் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையோரம் நின்ற காய்ந்த பனை மரம் முறிந்து சேது மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்.
கதறிய தாய்
தாயின் கண்முன்னே சிறுவன் உடல் நசுங்கி பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். அவர்களும் சிறுவனின் உடலை பார்த்து கண் கலங்கினர்.
தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாகரசம்பட்டி அருகே பனை மரம் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story