17 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் கொள்ளை


17 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2021 10:03 PM IST (Updated: 9 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மன்னார்குடி:
மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
இறுதி சடங்கு நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவக்கோட்டை மேலத்தெருவை  சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 39). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பரவாக்கோட்டையில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் இறந்ததால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்காக தர்மராஜ் சிங்கப்பூரிலிருந்து பரவாக்கோட்டைக்கு வந்தார். 
தர்மராஜ் தாயாரின் படத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அருகில் உள்ள தர்மராஜ்  தம்பி வீட்டில் நடந்தது. இதனால் தர்மராஜ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். 
ரூ.1 லட்சம் கொள்ளை
நேற்று காலை வீட்டிற்கு வந்த தர்மராஜ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு 
இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசில் தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை ே்சகரித்தனர். நகைகள் மற்றும் பணத்தை ெகாள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர். 
---

Next Story