மேல்மலையனூாில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மேல்மலையனூாில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்மலையனூர் வட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், மாநில அரசு, மத்திய அரசிடம் கேட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கோமாரி நோயால் கால்நடைகள் இறப்பதை தடுத்திட அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் எழில்ராஜா தலைமை தாங்கினார்.
வட்ட தலைவர் காண்டீபன், மாவட்டக்குழு சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விக்கிரவாண்டி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் முருகன், துணை தலைவர் மாதவன், நிர்வாகிகள் ராஜேந்திரன், பரத், ரவிச்சந்திரன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் வட்ட துணை தலைவர் ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story