நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கள்ளக்குறிச்சி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கள்ளக்குறிச்சி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஸ்ரீதர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
140 வாக்குச்சாவடி மையங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை அடிப்படையாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சின்னசேலம், வடக்கனந்தல், தியாகதுருகம், சங்கராபுரம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 140 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 59 ஆயிரத்து 566 பேரும், பெண் வாக்காளர்கள் 62 ஆயிரத்து 648 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 233 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) மாதேஸ்வரன், நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story