ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராஜாக்கமங்கலம்,
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தநிலையில் ஈத்தாமொழியை அடுத்த காற்றாடிதட்டு பகுதியை சேர்ந்த வாலி (வயது 39) என்ற சுயம்புலிங்கம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ரவடிகள் பட்டியலில் உள்ள அவர் மீது ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, வடசேரி, கோட்டார் உள்பட 8 போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 17 வழக்குகள் உள்ளதால் கலெக்டர் அரவிந்த் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலியை ராஜாக்கமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story