வாலாஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றம்
பழுதடைந்த கட்டிடத்தை அகற்றும் பணி
வாலாஜா
வாலாஜாவில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் படித்துள்ளனர். பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வேதியியல் ஆய்வுக்கூடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. அதன்படி ஆபத்தான நிலையில் இருந்த ஆய்வுக்கூட கட்டிடம் முழுவதும் பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதை, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story