ஆதனக்கோட்டை அருகே கார் மோதி ஐ.டி. நிறுவன ஊழியர் பலி
ஆதனக்கோட்டை அருகே கார் மோதி ஐ.டி. நிறுவன ஊழியர் பலியானார்.
ஆதனக்கோட்டை:
ஐ.டி. நிறுவன ஊழியர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுந்தமுத்து விநாயகர் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 30). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்து புதுக்கோட்டையில் இருக்கும் தனது உறவினர் வீட்டு கிரக பிரவேசத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நார்த்தாமலையை சேர்ந்த அப்துல்ஹரி மகன் பீர்முகமது (35) என்பவர் ஓட்டி வந்த கார், விக்னேஸ்வரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி
இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பீர்முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story