ஜெயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


ஜெயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 Dec 2021 11:30 PM IST (Updated: 9 Dec 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே ஜெயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் புதிதாக ஜெய பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திருப்பணி நிறைவு பெற்றதையொட்டி நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக சாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்கள் சுமந்து சென்று கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதன்பின்னர் கோவில் மூலஸ்தானத்தின் விமான கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அதன்பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மானாமதுரை தமிழரசி எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஜெகதீஸ்வர், திரிபுர சுந்தரி அம்மையார், ஜெய நந்தீஸ்வரர், தஞ்சையம்பதி விநாயகர், சித்தர் ஜெகதீஸ்வரர், சூட்டுக்கோல் செல்லப்பா சுவாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலாளர் ஜெயகாந்தன், பலர் கலந்து கொள்கின்றனர்.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலரும், 18 சித்தர் கோயில் பரம்பரை பூசாரியுமான தாஞ்சக்கூர் பாலசுப்பிரமணியன் செய்து வருகிறார்.




Next Story