யோக பைரவர் கோவிலில் சம்பக சஷ்டி உற்சவம் நிறைவு


யோக பைரவர் கோவிலில் சம்பக சஷ்டி உற்சவம் நிறைவு
x
தினத்தந்தி 9 Dec 2021 11:40 PM IST (Updated: 9 Dec 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

யோக பைரவர் கோவிலில் சம்பக சஷ்டி உற்சவம் நிறைவு விழா நடந்தது.

திருப்பத்தூர்,

குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருப்பத்தூர் யோக பைரவர் கோவிலில் சம்பக சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சம்பக சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் மதியம் 11.30 மணிக்கு யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யோகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நேற்று கடைசி நாள் வழிபாடு என்பதால் ஏராளமான பக்தர்கள் தேங்காய், பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



Next Story