மதுபோதையில் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


மதுபோதையில் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 12:24 AM IST (Updated: 10 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர், 
மதுபோதையில் தகராறு
கரூர் அருகே உள்ள அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 32), டிரைவர். இவர் தனது உறவினரான ராஜாவுடன் காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தார். 
அப்போது நெரூரை சேர்ந்த பாலன் மற்றும் பாபு (27) ஆகியோர் அவர்களுடன் மதுகுடித்து உள்ளனர். இதில், மதுபோதையில் இருந்த  சரண்ராஜுக்கும், பாலன் மற்றும் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து
இதையடுத்து, சரண்ராஜ் தனது உறவினரான ராஜாவுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். சின்ன காளிபாளையம் நான்கு ரோடு அருகே சென்ற போது அவர்களை வழிமறித்த பாலன் மற்றும் பாபு ஆகியோர் சரண்ராஜை பீர் பாட்டிலால் தாக்கினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கத்தியால் சரண்ராஜை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் படுகாயமடைந்த சரண்ராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கைது
இந்த சம்பவம் குறித்து வாங்கல் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தார். மேலும், இந்த வழக்கில் தப்பி ஓடிய பாலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story