முப்படை தளபதி உருவப்படத்துக்கு அஞ்சலி
முப்படை தளபதி உருவப்படத்துக்கு அஞ்சலி ெசலுத்தினர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மறைந்த முப்படை ராணுவத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தவதற்காக கருப்புப்பட்டை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், முப்படை ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் சாதனைகள் குறித்து விளக்கினார். பின்னர் அனைவரும் பிபின் ராவத்தின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி ெசலுத்தினர். இதேபோல் ராணுவ கிராமம் என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டி கிராமத்திலும் பிபின் ராவத் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். சிவகாசி கம்மவார் மெட்ரிக் பள்ளியில் பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் பொருளாளர் பார்த்தசாரதி தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சிவகாசி சிவன் கோவில் அருகில் பாரதீய ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவ படத்திற்கு விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story