நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
நெல்லை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் களக்காடு பேரூராட்சி தவிர்த்து 17 பேரூராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள 370 வார்டுகளுக்கு வாக்காளர்களை வார்டு வாரியாக, தெருவாரியாக கண்டறிந்து இணையதளம் மூலமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதனை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று மாலை வெளியிட்டார். அதனை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் மொத்தம் 370 வார்டுகள் அமையப் பெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 342 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 957 பேரும், இதர வாக்காளர்கள் 49 பேர் என மொத்தம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 348 பேர் உள்ளனர்.
902 வாக்குச்சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம் லால், மாநகராட்சி உதவி ஆணையாளர் நிர்வாகம் வெங்கட்ராமன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story