நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு:கரூரில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 619 வாக்காளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
கரூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் கரூர் மாநகராட்சி, குளித்தலை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு (அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் நேற்று வெளியிட்டார்.
இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
வாக்குச்சாவடி மையங்கள்
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 195 வார்டுகளில் 339 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 725 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 874 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 88 ஆயிரத்து 616 ஆண் வாக்காளர்களும், 97 ஆயிரத்து 486 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர்.
குளித்தலை, புலியூர்
குளித்தலை நகராட்சியில் 24 வார்டுகளில் 10 ஆயிரத்து 655 ஆண் வாக்காளர்களும், 11 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர்.
அரவக்குறிச்சியில் 15 வார்டுகளில் 5 ஆயிரத்து 254 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 839 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 93 வாக்காளர்கள் உள்ளனர்.
புலியூரில் 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 608 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 939 பெண் வாக்காளர்களும் என 9 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.
உப்பிடமங்கலத்தில் 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 9 ஆயிரத்து 42 வாக்காளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம், மருதூர்
கிருஷ்ணராயபுரத்தில் 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 296 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 495 பெண் வாக்காளர்களும் என 8 ஆயிரத்து 791 வாக்காளர்கள் உள்ளனர்.
மருதூரில் 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 386 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 728 பெண் வாக்காளர்களும் என 9 ஆயிரத்து 114 வாக்காளர்கள் உள்ளனர்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் 15 வார்டுகளில் 3 ஆயிரத்து 12 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்களும், ஒரு இதர வாக்காளரும் என 6 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர்.
நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி
நங்கவரத்தில் 18 வார்டுகளில் 6 ஆயிரத்து 775 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 396 பெண் வாக்காளர்களும், இதர ஒரு வாக்காளரும் என மொத்தம் 14 ஆயிரத்து 172 வாக்காளர்கள் உள்ளனர்.
புஞ்சை தோட்டக்குறிச்சியில் 15 வார்டுகளில் 3 ஆயிரத்து 744 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும் என 8 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சியில் 123 வார்டுகளில் 36 ஆயிரத்து 454 ஆண் வாக்காளர்களும், 39 ஆயிரத்து 531 பெண் வாக்காளர்களும், இதர 2 வாக்காளர்களும் என மொத்தம் 75 ஆயிரத்து 987 வாக்காளர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் பார்வைக்காக...
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இன்று (அதாவது நேற்று) வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக விளம்பரப்படுத்தப்படும்.
வாக்காளர்கள் தங்களது பெயர் இடம் பெற்றுள்ள விவரம் மற்றும் வார்டு விவரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story