‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 Dec 2021 12:54 AM IST (Updated: 10 Dec 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நடுகம்மாளர் தெருவில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ஞானசேகரன், நாச்சியார்கோவில்.

கரடு, முரடான சாலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெடுவாக்கோட்டை பகுதியில் உள்ள வேதபுரி வாய்க்கால் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், நெடுவாக்கோட்டை.

சாலையை சீரமைக்க வேண்டும்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த விளந்தகண்டம் பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  -பொதுமக்கள், விளந்தகண்டம்.

Next Story