சாலையில் சரிந்து விழுந்த கரும்புகளை அப்புறப்படுத்திய போலீசார்


சாலையில் சரிந்து விழுந்த கரும்புகளை அப்புறப்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 10 Dec 2021 1:06 AM IST (Updated: 10 Dec 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் சரிந்து விழுந்த கரும்புகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூரில் இருந்து உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் ஒன்று கரும்பு ஏற்றிக்கொண்டு சென்றது. வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது டிராக்டர் டிப்பரில் இருந்த கரும்புகள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் கொட்டிக்கிடந்த கரும்புகளை அள்ளி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாரின் செயலை பாராட்டினர்.

Next Story