பொதுமக்கள் சாலை மறியல்
சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்குபுரம் 4-வது தெருவில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் நகரசபை ஊழியர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story