தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம்  8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 1:34 AM IST (Updated: 10 Dec 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் திருமணம் நடந்த வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்மஆசாமி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் திருமணம் நடந்த வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்மஆசாமி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை பறிப்பு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் ஜார்ஜ். இவருடைய மனைவி மேரி ஜான்சி (வயது 26). இவரது சகோதரரின் திருமணம் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள புன்னைநகரில் நடந்தது. இதற்காக மேரி ஜான்சி குடும்பத்தினருடன் சகோதரர் வீட்டுக்கு வந்தார்.
திருமணம் முடிந்ததை தொடர்ந்து அன்றைய தினம் இரவு புன்னைநகர் வீட்டில் உள்ள அறையில் மேரி ஜான்சி தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது சமையல் அறையின் கதவில் போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை மர்மஆசாமி ஒருவர், அங்குள்ள ஜன்னல் வழியாக கையை விட்டு திறந்து, உள்ளே நுழைந்தார். பின்னர் தூங்கி கொண்டிருந்த மேரி ஜான்சியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்தார். அப்போது திடுக்கிட்டு எழுந்த அவர் பதறியபடி திருடன், திருடன் என கூச்சலிட்டார்.
ஆசாமிக்கு வலைவீச்சு
அதற்குள் திருடன் நகையை பறித்து விட்டு வந்த வழியாக கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டார். சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர்களால் திருடனை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடிவருகின்றனர்.

Next Story