மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2021 1:37 AM IST (Updated: 10 Dec 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சபாபதி நகரை சேர்ந்தவர் செல்லப்பா மகன் மகேந்திரன் (வயது 35). மெக்கானிக். இவர் நேற்று காலை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வந்து மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

35 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story