3 பேரை மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது


3 பேரை மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 1:53 AM IST (Updated: 10 Dec 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

3 பேரை மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

திருச்சி
திருச்சி வயலூர் ரோடு அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் அதீஷ் (வயது 19). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று மதியம் தனது நண்பர்களுடன், ஓடத்துறை ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அதீஷ் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன், ரூ.200 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து அதீஷ் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அதீஷிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்ததாக பாலக்கரை ஜெயில் பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (20), பீமநகரை சேர்ந்த சஞ்சீவி (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அதீஷின் செல்போன், பணம் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story