குளி்ாகால கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்


குளி்ாகால கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
x
தினத்தந்தி 10 Dec 2021 3:36 AM IST (Updated: 10 Dec 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று பெலகாவி கலெக்டர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

  பெலகாவி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நெகட்டிவ் சான்றிதழ்

  கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 13-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருப்பதுடன் 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும்.

  இத்தகையவர்களுக்கு மட்டுமே குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். இதுகுறித்து சட்டசபை மற்றும் தலைமை செயலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய சுவர்ண சவுதாவில் 2 மருத்துவ குழுக்களை நியமனம் செய்துள்ளோம். இங்கு தங்கும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

மின்னஞ்சல் அலுவலகம்

  அதே போல் அனைத்து அறைகளிலும் மின்னஞ்சல் அலுவலக வசதியையும் செய்துள்ளோம். அனைத்து ஆவணங்கள் மற்றும் கோப்புகள் இந்த மின் அலுவலகம் மூலம் பரிமாறப்படும். தற்காலிகமாக தாரிஹால் பகுதியில் ஒரு நகரத்தை அமைக்கிறோம். வெளியில் இருந்து 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பெலகாவிக்கு வருகிறார்கள். போலீஸ் கமிஷனருக்கு உணவு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

  கூட்டத்தொடரின்போது போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 500 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளோம். யாரும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்றும், இதை உறுதி செய்யும்படியும் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
  இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.

Next Story