தென்பழஞ்சி கண்மாய் நிரம்பியது
12 ஆண்டுகளுக்குபிறகு தென்பழஞ்சி கண்மாய் நிரம்பியது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி, வெள்ளப்பாறைப்பட்டி, வேடர்புளியங்குளம், தனக்கன்குளம், தோப்பூர், வடபழஞ்சி, மேலக்குயில்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக அமைந்து உள்ளன.
மாவிலிப்பட்டியில் இருந்து தென்பழஞ்சி உள்ளிட்ட 15 கண்மாய்களுக்கு வைகை பாசன வசதிக்காக கால்வாய் அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்
ஏராளமான விவசாயிகள் விவசாயத்தைவிட்டு தினக்கூலியாக மாற்றுதொழிலுக்கு சென்றுவிட்டனர். இதனால் விவசாயம் கேள்விகுறியானது. கண்மாய்கள் மட்டுமல்லாது நிலங்களும் தரிசாகவே இருந்து வந்தது
இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் கனமழையால் தென்பழஞ்சி கண்மாய் நிரம்பி உள்ளது.மேலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கண்மாயின் முழு கொள்ளளவை தொட்டு ஒரு சில நாளில் மறுகால் பாயும் நிலையில் உள்ளது. இதேபோல பாலைவனமாக இருந்து வந்த சாக்கிலிப்பட்டி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் ஓரளவுக்கு மழை தண்ணீர் தேங்கி உள்ளது.
Related Tags :
Next Story