செங்கல் சூளையில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் சாவு
செங்கல் சூளையில் மழைக்காக ஒதுங்கியபோது, மின்சாரம் தாக்கியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரமணா (வயது 21), பிரசாந்த் (21) ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த ரமணா, பிரசாந்த் இருவரும் செங்கற்கள் இருப்பு வைக்கும் அறையில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
அந்த அறையில் இருந்த இரும்பு குழாயில் மின்வயர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் இருவரும் அந்த இரும்பு குழாய் மீது சாய்ந்தபோது அவர்களை மின்சாரம் தாக்கியது.
இதில் ரமணா, பிரசாந்த் இருவரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story