அயர்லாந்து நாட்டு பூங்காவில் அமைப்பதற்காக 15 டன் கருங்கல்லில் ராட்சத வண்டு


அயர்லாந்து நாட்டு பூங்காவில் அமைப்பதற்காக 15 டன் கருங்கல்லில் ராட்சத வண்டு
x
தினத்தந்தி 10 Dec 2021 5:41 AM IST (Updated: 10 Dec 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

அயர்லாந்து நாட்டு பூங்காவில் அமைப்பதற்காக 15 டன் கருங்கல்லில் ராட்சத வண்டு மாமல்லபுரத்தில் தயாராகி வருகிறது.

சென்னை,

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில், அயர்லாந்து நாட்டில் உள்ள இந்திய சிற்பக்கலை பூங்காவில் அமைப்பதற்காக 15 டன் எடை கொண்ட கருங்கல்லில் 10 அடி நீளம், 8 அடி உயரத்தில் ராட்சத வண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் சின்னமாக வண்டு திகழ்கிறது. இந்த எகிப்தியர்கள் பலர் வண்டை தங்கள் கழுத்தில் டாலராக மாட்டி இருப்பர்.

இந்த வண்டின் முதுகில் உலக நாடுகளில் வாழ்ந்து மறைந்த தத்துவ ஞானிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தத்ரூபமாக நிஜ வண்டு ஒன்றை நேரில் பார்ப்பது போன்று இந்த வண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிற்ப கலை பூங்கா

மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்ப கலைஞர் முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 8 மாதமாக இந்த வண்டை செதுக்கி உள்ளனர். அயர்லாந்து நாட்டு சிற்ப கலை ஆர்வலர் விக்டர்வே(வயது 82) அந்த நாட்டில் தான் அமைத்துள்ள இந்திய சிற்ப கலை பூங்காவில் அந்நாட்டு மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த ராட்சத வண்டை அமைக்க உள்ளார்.

99 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட இந்த ராட்சத வண்டு இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அயர்லாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக இதனை வடிவமைத்த சிற்பி முருகன் தெரிவித்தார்.

Next Story