உள்ளாட்சி தேர்தல்: சென்னை மாநகராட்சிக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை நேற்று தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட மாநில தேர்தல் ஆணையம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி உத்தரவின்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 200 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று, வாக்காளர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்யப்பட்டது.
புகைப்பட வாக்காளர் பட்டியல்
இந்த நிலையில் நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் புகைப்படங்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.
அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் விஷூ மஹாஜன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா, தமிழக காங்கிரஸ் துணை தலைவர் தாமோதரன், பா.ஜ.க. சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
61 லட்சம் வாக்காளர்கள்
இந்த புகைப்பட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்கள், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 1,576 என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் 137-வது வார்டில் 58 ஆயிரத்து 620 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் 159-வது வார்டில் 3 ஆயிரத்து 116 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த புகைப்பட வாக்காளர் பட்டியல் மாநகராட்சியின் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்த பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story