கே.பி.பார்க் குடியிருப்பில் கட்டணம் இன்றி குடியேற உத்தரவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கே.பி.பார்க் குடிசைப்பகுதி மாற்றுவாரிய குடியிருப்பு மக்களிடம் ரூ.1.50 லட்சம் வசூலிக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி கடந்த 5-ந் தேதி முதல் 7-ந்தேதி வரையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் கிளர்ச்சி பிரசார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தியது.
இந்தநிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கே.பி.பார்க்கில் உள்ள 864 குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட மக்கள் எந்தவித கட்டணமும் இன்றி குடியேறுவதற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இயக்கப்படாமல் இருந்த ‘லிப்ட்’டும் இயக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய தொடர் இயக்கத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story