திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்


திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2021 6:01 PM IST (Updated: 10 Dec 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2021-22-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். இதில் திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ஆர்.கே.பேட்டை, சாலை உள்பட ஏழு கோட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 170 விவசாயிகளிடமிருந்து 8 ஆயிரத்து 46 ஏக்கர் நிலத்தில் விளைந்த 1.75 லட்சம் டன் கரும்பு பெறப்பட்டு ஏப்ரல் மாதம் 2-வது வாரம் வரை அரவை செய்யப்பட உள்ளது. கரும்பு அரவை தொடக்கவிழாவில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மலர்விழி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story