ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்


ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2021 7:08 PM IST (Updated: 10 Dec 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சதீஸ்பாபு, முல்லை சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் ஆகியோர் உள்பட 6 விவசாயிகள் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் லோயர்கேம்ப்பில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தால் தேனி மாவட்ட விவசாயிகள் பெரிதும பாதிக்கப்படுவார்கள். தற்போது வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தையே விரிவாக்கம் செய்ய வேண்டும். அல்லது வேறு மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் இது தொடர்பாக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
ஆனால் எம்.எல்.ஏ வெளியூர் சென்று இருந்தார். இதையடுத்து ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் அங்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ.விடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story