திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2021 7:10 PM IST (Updated: 10 Dec 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாங்காளி (வயது 47). இவரது மகள் ஆர்த்தி (21). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இந்த நிலையில் ஆர்த்தியின் பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். தனக்கு தற்போது திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று ஆர்த்தி கூறியுள்ளார். இருப்பினும் அவரை சமாதானம் செய்த அவரது பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். நேற்று முன்தினம் ஆர்த்தியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருந்தது.

இதைத்தொடர்ந்து மாங்காளி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அவரது மனைவி தேவி, மகன் அருண் ஆகியோர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி தனது கை, கால் மற்றும் முகத்தில் தோல் வியாதியால் கருப்பாக இருப்பதால் திருமணம் செய்ய விரும்பாத அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் அழுது புலம்பினார்கள். இது குறித்து மாங்காளி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story