ஊட்டியில் தேசிய மாணவர் படையினர் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி
ஊட்டியில் தேசிய மாணவர் படையினர் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி
ஊட்டி
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்காக இறந்த அதிகாரிகளின் உருவ படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.
Related Tags :
Next Story