தூத்துக்குடியில் 3 படகுகளில் என்ஜின் திருட்டு


தூத்துக்குடியில் 3 படகுகளில் என்ஜின் திருட்டு
x
தினத்தந்தி 10 Dec 2021 8:22 PM IST (Updated: 10 Dec 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3 படகுகளில் என்ஜின் திருடப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 நாட்டுப்படகுகளில் இருந்த என்ஜினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்களாம். இது குறித்து படகு உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் விசாரணைக்காக வழக்கு தெர்மல்நகர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து படகு என்ஜினை திருடிய மர்ம நபர்களை தெர்மல்நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story