திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய டிக்கெட் கவுண்டர் திறப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதிய டிக்கெட் கவுண்டர் நேற்று திறக்கப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.20, ரூ.100, ரூ.250 கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனமும் உள்ளது. இதில் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.20 கட்டண தரிசன பாதை கோவில் சண்முக விலாச மண்டபத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது. அதேபோல் ரூ.100 மற்றும் ரூ.250 கட்டண தரிசன பாதை சண்முக விலாச மண்டபத்தின் மேற்கு பகுதியில் உள்ளது.
தற்போது கோவிலுக்கு தினசரி பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பக்தர்களின் வசதி கருதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுபடி ரூ.100 மற்றும் ரூ.250 கட்டண டிக்கெட் கவுண்டர் கோவில் வளாகத்தில் உள்ள கவுண்டர் மடம் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் குமரதுரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், உதவி ஆணையர் வெங்கடேசன் உள்பட கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story