689 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


689 மையங்களில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Dec 2021 10:08 PM IST (Updated: 10 Dec 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

689 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 69 ஆயிரத்து 21 பேர் முதல் தவணையும், 9 லட்சத்து 68 ஆயிரத்து 825 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 26 ஆயிரத்து 679 பேர் முதல் தவணையும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 820 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது.
14-வது கட்டமாக இன்று (சனிக்கிழமை) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடக்கிறது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 689 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் முகாம் நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்த பணியில் 2 ஆயிரத்து 756 பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Next Story