பாலியல் வன்முறை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
திருவாரூர்:
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
பாலியல் வன்முறை
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களில் போலீஸ் துறை சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புகார் தெரிவித்தால் நடவடிக்கை
பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்கள் பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையற்ற பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுக்க வேண்டும். பாலியல் வன்முறை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story