தளி பகுதியில் கொள்ளு செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.


தளி பகுதியில் கொள்ளு செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.
x
தினத்தந்தி 10 Dec 2021 10:31 PM IST (Updated: 10 Dec 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

தளி பகுதியில் கொள்ளு செடிகள் செழித்து வளர்ந்துள்ளது

தளி, 
தளி பகுதியில் கொள்ளு செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.
அணைகள்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமராவதி அணைகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைகளுக்கு மலைக்காலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதை தவிர்த்து திருமூர்த்தி அணைக்கு மட்டும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
 இந்த அணைகளை ஆதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு, சப்போட்டா, கொய்யா மற்றும் அவரை, கத்தரி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் இந்த அணைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பருவமழை தீவிரம்
நடப்பாண்டில் நிலவிய வறட்சிக்கு பின்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. அமராவதி அணைக்கு வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாகவும், பி.ஏ.பி. அணைகளின் தயவால் காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது. 
இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 
அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் அமராவதி அணைக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற அதிகப்படியான நீர் வரத்து உபரி நீராக அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கொள்ளு, கம்பு
பருவமழை சமவெளிப்பகுதியிலும் நல்ல முறையில் பெய்து வந்ததால் விவசாயிகள் நிலங்களை உழுது பண்படுத்தி சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டினார்கள். அந்த வகையில் பாசன நிலங்களில் காய்கறிகளும் மானாவாரி நிலங்களில் கொள்ளு, மொச்சை, பாசிப்பயறு, தட்டைபயிர், கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 
குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்ததால் காய்கறி செடிகள் விளைந்து பின்னடைவை சந்தித்தாலும் கொள்ளு, கம்பு, சோளம் உள்ளிட்டவை நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அவற்றை பராமரிப்பு செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைக்கவில்லை என்றாலும் செடிகளின் கழிவுகள் மண்ணுக்கு உரமாகும் சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story