தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சீரமைக்க வேண்டிய சாலை
கீழ்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடவிளையில் இருந்து காவுவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வதாஸ், ஆலங்காட்டுவிளை.
குரங்குகள் அட்டகாசம்
வில்லுக்குறி அருகே உள்ள தினவிளை பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அதிக அளவில் வலம் வருகின்றன. அவைகள் வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக புகுந்து உணவுகளை அள்ளிச் செல்கின்றன. தென்னை, மா, பலா, வாழை மரங்களில் காய்களை சேதப்படுத்துவததால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. குரங்குகளை விரட்டும் போது கடிக்க வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-சுரேஷ்குமார், தினவிளை.
‘சுவிட்ச்’ பெட்டி மாற்றப்படுமா?.
கோட்டார் கவிமணி பள்ளி பின்புறம் கருப்பசாமி கோவில் தெருவில் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி புதிய பெட்டியை பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.சிவகுமார் கோட்டார்.
சீரமைக்க வேண்டிய சாலை
கீழ்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடவிளையில் இருந்து காவுவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வதாஸ், ஆலங்காட்டுவிளை.
சேதமடைந்த மின்கம்பம்
வெள்ளமடத்தில் இருந்து சுசீந்திரம் செல்லும் சாலையில் குலசேகரன்புதூர் அரசமரம் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் சில சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஐ.அம்பேத்கர்,
குலசேகரன்புதூர்.
தடுப்பு சுவர் தேவை
கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட உடையார்விளை சந்திப்பு பகுதியில் இருந்து கோணங்காடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உடையார்விளை சந்திப்பில் இருந்து சிறிது தூரத்தில் கால்வாயின் மேல் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக எடுக்க வேண்டும்.
-கா.டைட்டஸ்ராஜன், உடையார்விளை.
எரியாத மின்விளக்குகள்
மருங்கூர் கிராம தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பல கம்பங்களில் விளக்குகள் எரியாமல் உள்ளது. அந்த பகுதி மக்கள் இரவு நேரம் வெளியே செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய விளக்குகள் அமைத்து எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.எ.நாராயணன், மருங்கூர்.
Related Tags :
Next Story