திருப்பூர் காலஜ் ரோட்டில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்தது


திருப்பூர் காலஜ் ரோட்டில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்தது
x
தினத்தந்தி 10 Dec 2021 11:11 PM IST (Updated: 10 Dec 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் காலஜ் ரோட்டில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்தது

அனுப்பர்பாளையம், 
திருப்பூர் காலஜ் ரோட்டில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்தது.போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோவை  குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர் என்பது தெரியவந்தது.
உட்கார்ந்த நிலையில் பிணமாக...
திருப்பூர் காங்கேயம் ரோடு கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் பாரூக் (வயது 46). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு ஊஞ்சக்காடு தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அப்துல் பாரூக் வீட்டிற்கு கேன் தண்ணீர் கொடுப்பதற்காக ராஜேந்திரன் என்பவர் சென்றுள்ளார். 
அப்போது அவருடைய வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினரிடம் ராஜேந்திரன் கூறி உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரும் கதவை தட்டி பார்த்து விட்டு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது அப்துல் பாரூக் வீட்டிற்குள் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்
 இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்துல் பாரூக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல் பாரூக் கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், பின்னர் 2008-ம் ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பதும் தெரிந்தது. 
இதன் பின்பு 2013-ம் ஆண்டு திருமணம் செய்த அப்துல் பாரூக் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பூட்டிய வீட்டிற்குள் அப்துல் பாரூக் அழுகிய நிலையில் பிணமாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story