சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:24 PM IST (Updated: 10 Dec 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், சாராயம் மற்றும் போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வாலாஜாவில் நடந்தது. அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது. ஊர்வலத்தில் மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் மதுவை மறப்போம், உயிரைக் காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர், கல்லூரி முதல்வர் பரமேஸ்வரி, தாசில்தார்கள் நடராஜன் (கலால்), ஆனந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலால் பிரிவு மகேஸ்வரி, காண்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story