மவுன ஊர்வலம்
ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகரில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகர்,
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகரில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இந்நகர் தேசபந்து திடலில் இருந்து தொடங்கிய இந்த மவுன அஞ்சலி ஊர்வலம் எம்.ஜி.ஆர். சிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில், செயலாளர் வெற்றி, துணைத்தலைவர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story