பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி சாலையில் வாகனம் நிறுத்தும் போராட்டம்


பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி சாலையில் வாகனம் நிறுத்தும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:41 PM IST (Updated: 10 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

விலையை குறைக்க வலியுறுத்தி சாலையில் வாகனத்தை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை பத்து நிமிடம் சாைலயில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் முக்கிய இடங்களான புதிய, பழைய பஸ் நிலையங்கள் அருகே, நான்கு ரோடு பகுதிகளில் சென்ற வாகனங்களை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பத்து நிமிடம் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெட்ரோல்-டீசலுக்கு கலால் வரி வசூலிப்பதை குறைக்க வேண்டும். பெட்ரோல்- டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். வாகனம் நிறுத்தும் போராட்டத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போலீசாரும் எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story