நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பிடிப்பட்டது
நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பிடிப்பட்டது
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.
அதேபோல கேத்தாண்டப்பட்டி பரசுராமன் வட்டத்தில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும் பிடித்தனர்.
Related Tags :
Next Story