வியாபாரிகள் திடீர் முற்றுகை


வியாபாரிகள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 11 Dec 2021 12:29 AM IST (Updated: 11 Dec 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் வியாபாரிகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேவகோட்டை,

தேவகோட்டையில் வியாபாரிகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

வாடகை பாக்கி வசூல்

தேவகோட்டை நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது..அந்த கடைகள் கடந்த 2019-20-ம் ஆண்டில் இருந்து நேற்று வரை அனைத்து கடைகளுக்கும் ரூ.4 கோடியே 65 லட்சத்து 16 ஆயிரத்து 540 வாடகை பாக்கியாக நிலுவையில் உள்ளது. இதை வசூல் செய்ய நக ராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
 இந்நிலையில் நேற்று முன்தினம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மதுசூதனன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் 9 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையை தொடர்ந்து அன்று மாலைக்குள் 16 சதவீதம் வசூலானது.

வியாபாரிகள் போராட்டம்

இதன்பின்னர் நேற்று காலை வாடகைதாரர்களான தேவகோட்டை நகர் மற்றும் பஸ் நிலைய குத்தகை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திடீரென கடைகளை அடைத்து விட்டு நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் உள்ளே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு போட்டியாக உடனடியாக நகராட்சி ஆணையாளர் மதுசூதனன் தலைமையில் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் அலுவலகத்தின் முகப்பில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவலறிந்த நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் இரு தரப்பினரும் கலந்து கொள்ளும் சமரச கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து ஆணையாளர் தலைமையில் ஏ.ஐ.டி.யூ.சி. வியாபாரிகள் சங்க தலைவர் பெரியகருப்பன், முன்னாள் அ.தி.மு.க. நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம் முன்னாள் கவுன்சிலர்கள் ஜாகிர் உசேன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் வியாபாரிகள் சார்பில் நகராட்சி கடைகளுக்கு 300 சதவீதம் அளவிற்கு வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது அதை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. நகராட்சி ஆனையாளர் வருகிற மார்ச் மாதத்திற்குள் வாடகை பாக்கியை 70 சதவீதம் கட்டிவிட வேண்டும் என்றும், உடனடியாக 20 சதவீதம் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்பட்டது.

Next Story