தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதி டாக்டர் சாவு

திருச்சி, டிச.11-
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமணிகண்டன் (வயது 27). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாலமணிகண்டன் ஸ்கூட்டரில் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனது நண்பர் ராகுல்காந்தியுடன் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜி-கார்னர் அருகே வந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் பாலமணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரைதனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதில் ராகுல்காந்தி காயம் இன்றி தப்பினார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story