சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 12:37 AM IST (Updated: 11 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் பில்லங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பில்லங்குளம்- காரியானூர் சாலையில் தரைப்பாலம் அருகே கடலூர் மாவட்டம் லட்சுமணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது 54) சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து மனோகரனை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 57 லிட்டர் சாராயத்தையும், சாராயம் விற்பதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மனோகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story