10 நிமிடம் வாகனங்கள் நிறுத்தும் போராட்டம்

திருச்சி, டிச.11-
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிராகவும், அதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சி.ஐ.டி.யூ.தொழிற்சங்கத்தின் நேற்று ஒரு நாள் பகல் 12 மணி முதல் 12.10 மணிவரை, அதாவது 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர். திருச்சி மாநகரில் மத்திய பஸ்நிலையம், ஜங்ஷன் ரெயில்நிலையம் உள்பட 10 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. அதே வேளையில் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சில வாகன ஓட்டிகள் ஏன்? வாகனத்தை நிறுத்த சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அவர்களிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக 10 நிமிடம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடப்பதாக கூறினர். அதை சிலர் புரிந்து கொண்டு, வாகனத்தை சில நிமிடங்கள் நிறுத்தி, அதன் பின்னர் சென்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 113 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் திருச்சி கம்பரசம்பேட்டையில் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமயபுரம் நால் ரோட்டில் நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொருளாளர் சேகர் தலைமையில் போராட்டத்ததில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story