பலூனில் கியாஸ் நிரப்பியபோது சிலிண்டர் வெடித்தது


பலூனில் கியாஸ் நிரப்பியபோது சிலிண்டர் வெடித்தது
x
தினத்தந்தி 11 Dec 2021 1:13 AM IST (Updated: 11 Dec 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

பலூனில் கியாஸ் நிரப்பியபோது சிலிண்டர் வெடித்து 100 அடி உயரம் பறந்தது.

மதுரை, 
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அக்பர்அலி. அவருடைய மனைவி ரோஜா பானு (வயது 45), குழந்தைகளுக்கான கியாஸ் பலூன்களை விற்பனை செய்து வருகிறார்.
நேற்று காலை பை-பாஸ் ரோடு பொன்மேனி பகுதியில் ஒரு தள்ளுவண்டியில் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். 
அப்போது பலூனில் கியாசை ஏற்றிய போது திடீரென்று சிலிண்டர் வெடித்து சிதறியது. அது சுமார் 100 அடி உயரத்திற்கு பறந்து மூன்று துண்டுகளாக சிதறி, ஒரு துண்டு எதிரே உள்ள 4 மாடி கட்டிடத்தின் மீது விழுந்தது.
மற்றொரு பாகம் கடையின் முன்புறமுள்ள கண்ணாடியை உடைத்து விழுந்தது. மற்றொரு துண்டு அங்குள்ள ஆஸ்பத்திரி முன்பு விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரோஜாபானு உள்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிலிண்டர் வெடித்த போது பயங்கர சத்தம் கேட்டதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 இது குறித்து அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் விரைந்து வந்து பலூன் விற்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story