தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்


தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 11 Dec 2021 1:14 AM IST (Updated: 11 Dec 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி, 
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாள் திருவிழா
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 
விழாவில் நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை போன்றவை நடந்தது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.  தொடர்ந்து திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நற்கருணை ஆராதனை
இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.
16, 17-ந் தேதிகளில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.  18-ந் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனி போன்றவை நடைபெறும். 
திருவிழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறும். 
இரு தங்க தேர் பவனி
காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். விழாவில் பங்கு மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், பங்கு தந்தையர்கள் ஜேக்கப், கிங்ஸ்லி, மெர்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், துணை செயலாளர் பினோ, பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.

Next Story