ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 Dec 2021 1:37 AM IST (Updated: 11 Dec 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி பாபநாசம் பகுதியில் நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 1.7 ஏக்கர் தோப்பு புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அதனை அகற்றும் பணியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி, விக்கிமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் கண்மணி, பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர் இசக்கி, கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், உதவியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதையொட்டி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story