சுகாதாரமற்ற குடிநீர்
சுகாதாரமற்ற குடிநீர்
சுகாதாரமற்ற குடிநீர்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அகரமாங்குடி மேலத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் குழாயில் துணியை வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். அப்படி இருந்தும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் அசுத்தமாக வருகிறது. இந்த அசுத்தமான தண்ணீரை குடிப்பதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தொற்று நோய்களில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அகரமாங்குடி
ஆபத்தான மின்மாற்றி
தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை பகுதியில் உள்ள சாலையில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி உள்ள மின்கம்ப தூண்களின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
நவீன்வாளமர்கோட்டை
குண்டும் குழியுமான சாலை
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள கஸ்தூரிநகரில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா
பொதுமக்கள் தஞ்சை
சாலை சீரமைக்கப்படுமா
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த ஆடுதுறை ரெயில்வே கேட் பகுதியில் இருந்து ரெயிலடி வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கரவாகனம், கார் மற்றும் கனரக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
பொதுமக்கள் ஆடுதுறை.
Related Tags :
Next Story